கேரள சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அறிக்கையை நிதியமைச்சர் தாமஸ் ஐசக் 3 மணி நேரம் 16 நிமிடங்கள் வாசித்து தாக்கல் செய்தார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய பிறகு ஜனவரி 8ஆம் தேதி கேரள சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. ஆளுநர் முகமது ஆரிப் கான் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் பின் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆளும் இடது முன்னணி அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பாலக்காடு மாவட்டத்தில் உள்ள குஜல்மண்டம் பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவி சினேகா எழுதிய கவிதையை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கிய தாமஸ் ஐசக் 3 மணி நேரம் 17 நிமிடங்கள் வாசித்து கேரளத்தில் அதிகநேரம் பட்ஜெட் உரை வாசித்த நிதியமைச்சர் எனும் பெருமையைப் பெற்றார்.
கேரள காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான கே.எம்.மணி முன்பு 2 மணி நேரம் 54 நிமிடங்கள் வாசித்த பட்ஜெட் உரையே முந்தைய அதிக நேரம் வாசித்த பட்ஜெட் உரையாக இருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


