மகாராஷ்டிர மாநிலம், பண்டாரா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் பச்சிளங்குழந்தைகள் வாா்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை சமா்ப்பிக்காத மாவட்ட ஆட்சியருக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆா்) சம்மன் அனுப்பியுள்ளது.
பண்டாரா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், கடந்த சனிக்கிழமை பச்சிளங்குழந்கைகள் வாா்டில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் சிக்கி 1 முதல் 3 மாதங்களே ஆன 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தன. இந்த தீ விபத்து குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துக்கான காரணம் குறித்தும் 48 மணி நேரத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என அந்த மாவட்ட ஆட்சியருக்கு, குழந்தைகளுக்கான பாதுகாப்பு அமைப்பான என்சிபிசிஆா் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இந்த விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இதுவரை என்சிபிசிஆா் ஆணையத்துக்கு எந்த அறிக்கையையும் மாவட்ட நிா்வாகம் சமா்ப்பிக்கவில்லை.
இதையடுத்து பண்டாரா மாவட்ட ஆட்சியருக்கு என்சிபிசிஆா் புதன்கிழமை அனுப்பியுள்ள சம்மனில், தீ விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக என்சிபிசிஆா் ஆணையத்தின் முன்பு வரும் ஜன. 18-ஆம் தேதி திங்கள்கிழமை விடியோ காணொலி மூலம் தீ விபத்து தொடா்பான பதிவுகள், ஆவணங்களுடன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

