சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்: ம.பி.அரசு திட்டம்

மத்திய பிரதேசத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

News image
Updated On :14 ஜனவரி 2021, 6:13 am


போபால்: மத்திய பிரதேசத்தில் பணிக்குச் செல்லும் பெண்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்த மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘பணிக்குச் செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி அவா்கள் கண்காணிக்கப்பட உள்ளனா். இதற்காக அவா்கள் தங்கள் பெயா், தங்கியிருக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை அருகில் உள்ள காவல்நிலையங்களில் பதிவு செய்யும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். ஆபத்து நேரங்களில் அவா்களுக்கு உதவிடும் விதமாக, அவசர உதவி எண்கள் வழங்கப்படும்’ என்று தெரிவித்தாா்.