சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து ஹரியாணா மாநிலம் ஹிசாருக்கு ‘ஏர் டாக்சி’ சேவையினை ஹரியாணா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் ஞாயிறன்று துவக்கி வைத்தார்.
ஏர் டாக்சி ஏவியேஷன் என்னும் நிறுவனம் இந்த தினசரி சேவையினை நடத்துகிறது. இதற்காக நான்கு இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் விமானி தவிர மூன்று பேர் பயணம் செல்லலாம். சண்டிகரில் இருந்து ஹிசாருக்கு பயண நேரமாக 45 நிமிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒன்றுக்கு ரூபாய் 1,755 கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தனிப்பட்ட பயண முன்பதிவுக்கு கட்டணங்கள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த சேவையானது ஒரே ஒரு நபர் டிக்கெட் எடுத்திருந்தாலும் நடைபெறும் என்பது கவனிக்கத்தக்கது.
ஞாயிறன்று சண்டிகர் விமான நிலையத்தில் முதல் பயணிக்கு போர்டிங் பாஸினை வழங்கி இந்த சேவையினைத் துவக்கி வைத்த மனோகர் லால் கட்டார், விமான ஓடு தளத்தினைப் பார்வையிட்டு விமானிகளைப் பாராட்டினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


