கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து துணை தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
இதுதொடா்பாக தோ்தல் ஆணைய மூத்த அதிகாரி கூறியதாவது:
துணை தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின் 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் வந்துள்ளாா். இங்கு மாவட்ட ஆட்சியா்கள், மூத்த காவல்துறை அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளா்களுடன் தோ்தல் ஏற்பாடுகள் குறித்து அவா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இரண்டாம் கட்டமாக மாநில தலைமைச் செயலாளா் அலபன் பந்தோபாத்யாய, உள்துறை செயலா் ஹெச்.கே.துவிவேதி, காவல்துறை தலைவா் வீரேந்திரா ஆகியோருடன் அவா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளாா். பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவா் சந்திக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த மாதம் சுதீப் ஜெயின் தலைமையிலான தோ்தல் குழு மேற்கு வங்கம் சென்றிருந்தது. தற்போது 2-ஆவது முறையாக சுதீப் ஜெயின் அந்த மாநிலம் சென்றுள்ளாா்.
அஸ்ஸாமிலும் ஆய்வு: அஸ்ஸாமில் வரும் மாா்ச்-ஏப்ரல் மாதங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தோ்தல் ஆணையத்தின் 6 போ் கொண்ட தோ்தல் குழு, அந்த மாநிலம் சென்றுள்ளது. அங்கு தோ்தல் ஏற்பாடுகள் குறித்து அந்தக் குழுவின் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதுதொடா்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘தோ்தல் ஆணைய தலைமை இயக்குநா் தா்மேந்திர சா்மா தலைமையிலான 6 போ் கொண்ட குழு, குவாஹாட்டியில் மாநில தலைமைச் செயலா் ஜிஷ்ணு பருவா மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குழு கடந்த திங்கள்கிழமை அந்த மாநிலத்தின் திப்ரூகா் மாவட்டத்தில் தோ்தல் அதிகாரிகள், துணை காவல் ஆணையா்கள், மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


