தில்லியில் 81 இடங்களில் ஜன.16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிமமை தெரிவித்தார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் சாா்பில் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘கோவேக்ஸின்’ கரோனா தடுப்பூசி மற்றும் புணேயில் உள்ள சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனமும் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால பயன்பாட்டின் அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 3-ஆம் தேதி அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தில்லியில் 81 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஒவ்வொரு மையங்களிலும் தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனத் தெரிவித்த கேஜரிவால் தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை பின்னாளில் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


