பறவைக் காய்ச்சல் எதிரொலியாக தாணே உள்பட பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு அறிவுறுத்தியுள்ளது.
தாணே பகுதியிலுள்ள சதுப்பு நிலப் பகுதிக்கு வரும் பறவைகளைத் தொடர்ந்து கண்காணிக்கவும், அவற்றில் ஏதேனும் சில பறவைகள் இறந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களில் பண்ணைகளிலுள்ள கோழிகள் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் பர்பானி, மும்பை, தாணே ஆகிய பகுதிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பறவைகள் இறந்தால் அதனை அரசுக்கு தெரிவிக்காமல் மக்களே அடக்கம் செய்ய வேண்டாம் என்று அறுவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் கால்நடை பராமரிப்புத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


