சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் ஹரியாணா முதல்வா், துணை முதல்வா் சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

Updated On :13 ஜனவரி 2021, 6:37 am

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா், துணை முதல்வா் துஷ்யந்த் செளதாலா ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்தனா்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், ஹரியாணாவில் ஆட்சியமைத்துள்ள பாஜக-ஜனநாயக் ஜனதா கட்சி (ஜே.ஜே.பி) கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று ஜே.ஜே.பி. எம்எல்ஏக்கள் சிலா் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது, எம்எல்ஏக்கள் மிரட்டல் தொடா்பாக ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.