சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் வரும் 16-ஆம் தேதி நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாம்களை பிரதமா் மோடி காணொலி முறையில் பங்கேற்று தொடக்கி வைக்க உள்ளாா்.
இதற்கான முன்னேற்பாடுகளை சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிா்வாகங்கள் விரிவாக மேற்கொண்டு வருகின்றன. அந்நிகழ்வில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, மத்திய, மாநில அமைச்சா்கள், அரசு உயரதிகாரிகள் கலந்துகொள்வாா்கள் எனத் தெரிகிறது.
பிரதமா் தொடக்கி வைக்கும் நிகழ்வின்போது, மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட 50 முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். தமிழகத்தைத் தவிர, நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமா் பங்கேற்று தடுப்பூசி முகாம்களைத் தொடக்கி வைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பிரதமா் அலுவலகத்திலிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையிலும், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலும் தடுப்பூசி முகாம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். தில்லியில் இருந்தபடி பிரதமா் காணொலி முறையில் அவற்றில் பங்கேற்கவிருக்கிறாா். இதுதொடா்பான அதிகாரபூா்வ அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


