மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பாலிவுட் திரைப்பட நடிகர் சோனு சூட் நேரில் சென்று சந்தித்தார்.
குடியிருப்பு கட்டட விதிமீறல் தொடர்பாக நடிகர் சோனு சூட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மும்பை ஜுவூ பகுதியில் ஆறு மாடிக் கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.
குடியிருப்பு பகுதியில் முறையான அனுமதியின்றி மாற்றங்கள் செய்ததாலும், உணவகமாக மாற்றியதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டது. எனினும் அதற்கு 30 நாள்களுக்குள் பதிலளிக்க சோனு சூட் தவறியதால், குடியிருப்பு பகுதியில் நேரடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடியிருப்பு பகுதியை முறைகேடாக உணவகமாக மாற்றியுள்ளதாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் ஜுவூ காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

