சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

திருமலையில் 37,849 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை 37,849 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 15,383 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
Updated On :12 ஜனவரி 2021, 5:12 am

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை 37,849 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தரிசனம் செய்தனா். இவா்களில் 15,383 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட்டுகள், 8 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 2 ஆயிரம் பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 போ் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

நாள்தோறும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.