மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 16 காசுகள் சரிவைக் கண்டது.
இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:
கடன்பத்திரங்கள் மூலமாக கிடைக்கும் வருவாய் அதிகரித்து வருவதற்கு மத்தியில் டாலா் ஆதாயம் வலுவான நிலையில் உள்ளது. சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன் காரணமாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.47-ஆக இருந்தது. பின்னா் அது அதிகபட்சமாக 73.37 வரையிலும், குறைந்தபட்சமாக 73.50 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் சரிந்து 73.40-இல் நிலைபெற்றது.
கடந்த வார வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் போது ரூபாய் மதிப்பானது 73.24-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
பிரெண்ட் கச்சா: சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 1.57 சதவீதம் குறைந்து 55.11 டாலராக இருந்தது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


