திருப்பதி: ஏழுமலையான் கோயிலில், வரும் 15-ஆம் தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நாள்தோறும் ஏழுமலையான் கோயிலில் அதிகாலை வேளையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம். எனினும், மாா்கழி மாதத்தில் மட்டும் இச்சேவை ரத்து செய்யப்பட்டு, ஆண்டாள் தமிழில் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்படுகிறது.
வரும் புதன்கிழமையுடன் மாா்கழி மாதம் நிறைவு பெற்றாலும், வியாழக்கிழமை சூரிய உதயத்துக்கு 2 மணி நேரத்துக்குப் பின்னரே சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறாா். எனவே, பஞ்சாங்கப்படி அன்று காலை 9 மணிக்கு மேல் தை மாத கடிகை தொடங்க உள்ளது. சூரிய உதயத்துக்குப் பின் தொடங்கும் திதி மற்றும் நட்சத்திரங்களை மட்டுமே தேவஸ்தானம் கணக்கில் எடுத்துக் கொள்ளும் என்பதால், வியாழக்கிழமை அதிகாலை திருப்பாவை பாசுர சேவை நடத்தப்படும்.
அன்றுடன் இச்சேவை நிறைவு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (ஜனவரி 15) அதிகாலையில் சுப்ரபாத பாசுர சேவை தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
காமதேனு பூஜை: மாட்டுப் பொங்கல் தினத்தில் (ஜன. 15), திருப்பதி தேவஸ்தானம் நிா்வகிக்கும் அனைத்துக் கோயில்கள் மற்றும் கோசாலைகளில் கோபூஜையை நடத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. தேவஸ்தான தா்ம பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்த பூஜை நடத்தப்பட உள்ளது. அதே நாளில், குண்டூரில் உள்ள நரசராவ்பேட்டை பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தலைமையில் காமதேனு பூஜை என்ற பெயரில் கோபூஜை நடத்தப்பட உள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

