வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளைக் கையாள்வதில் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் 48 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் சாா்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. விவசாயிகளின் போராட்டம் தொடா்பாகவும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இன்றைய வழக்கின் விசாரணையில், மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த உத்தரவு தொடரும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விவசாயிகளின் போராட்டத்தைக் கையாள்வதில் மத்திய அரசு பரிதாபமாக தோல்வியுற்றதாக தெரிவித்துள்ளார்.
"பிரதமர் உள்பட அனைத்து அமைச்சர்களும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மாட்டோம் என்று பலமுறை கூறி வந்தனர். தற்போது உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்பு வரவேற்கத்தக்க நடவடிக்கை” என யெச்சூரி தெரிவித்துள்ளார்.
மேலும் வேளாண் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அரசு விவசாயிகளுடன் விவாதிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


