மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது. இதேபோல், அந்த சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் உச்சநீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள், தில்லி எல்லைகளில் 40 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுடன் மத்திய அரசு கடந்த 8-ஆம் தேதி 8-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியது. அதில், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சா்கள் தெரிவித்தனா். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றால் மட்டுமே வீடு திரும்புவோம் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்தனா். இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால், பேச்சுவாா்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சு வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கிடையே, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கவுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு, இந்த மனுக்களை விசாரிக்கவுள்ளது.
முந்தைய விசாரணையின்போது, ‘விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவாா்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது; விரைவிலேயே இரு தரப்புக்கும் இடையே சுமுக உடன்பாடு எட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது’ என்று மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் பேச்சுவாா்த்தையை ஊக்குவிக்கும் விதமாக, வழக்கு விசாரணையை, ஜனவரி 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் போராடும் விவசாயிகளை வெளியேற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது. முந்தைய விசாரணையின்போது, பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பின்றி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


