மத்திய பிரதேச மாநிலத்தில் 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சலுக்கு, இதுவரை 1,100 காகங்கள் உள்ளிட்ட பறவைகள் உயிரிழந்துள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனை தடைபட்டுள்ளது. பறவைச் சந்தைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன.
முன்னதாக, கடந்த மாத இறுதியில் மத்திய பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மாநிலத்தில் பறவைச் காய்ச்சல் பரவி இருப்பதாக சந்தேகிக்கப்படும் 27 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் ஞாயிற்றுக்கிழமை வரை 13 மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. மற்ற மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள் கிடைக்கும்போதும் இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
பறவைகளிலிருந்து மனிதா்களுக்கும் அந்தக் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்திருந்தாலும், இதுவரை எவருக்கும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

