நாட்டின் நிலக்கரி இறக்குமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலகட்டத்தில் 17 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து சரக்கு கப்பல் போக்குவரத்து நிறுவனங்களின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 13.71 கோடி டன்னாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதியான 16.53 கோடி டன் நிலக்கரியுடன் ஒப்பிடும்போது 17 சதவீதம் சரிவாகும்.
குறிப்பாக, கடந்த நவம்பா் மாதத்தில் நிலக்கரி இறக்குமதி 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2.17 கோடி டன்னிலிருந்து 2.03 கோடி டன்னாக சரிவைக் கண்டது. இதில், கோக்கிங் அல்லாத நிலக்கரி இறக்குமதி 1.53 கோடி டன்னிலிருந்து சரிந்து 1.37 கோடி டன்னாகவும், கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 41 லட்சம் டன்னிலிருந்து அதிகரித்து 42.80 லட்சம் டன்னாகவும் இருந்தன.
ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் கோக்கிங் சாரா நிலக்கரி இறக்குமதி 11.40 கோடி டன்னிலிருந்து 9.14 கோடி டன்னாகவும் கோக்கிங் நிலக்கரி இறக்குமதி 3.27 கோடி டன்னிலிருந்து 2.81 கோடி டன்னாகவும் இருந்தது என அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் 24.8 கோடி டன் நிலக்கரி இறக்குமதி செய்து கொண்ட வகையில் நம்நாட்டிலிருந்து ரூ.1 லட்சம் கோடி அந்நியச் செலாவணி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


