மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு சாலை விபத்துக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
அமராவதி சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இரண்டு பேருக்கும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
கலாம்னா பகுதியில் உள்ள சிக்லி சௌக்கில் மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது. வேகமாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தில் வந்த 72 வயது முதியவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


