புது தில்லி: நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, இதுவரை கரோனா பாதிப்பு 1.04 கோடியாக உயர்ந்துள்ளது.
இதுவரை கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 92 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இன்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 16,311 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு 1,04,66,595 ஆக அதிகரித்தது. அதேவேளையில் நாட்டில் கரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,00,92,909 ஆக உயர்ந்துள்ளது. இது 96.43 சதவீதமாகும்.
நேற்று கரோனா பாதித்தவர்களில் 161 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 1,51,160 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.44 சதவீதமாகும். ஆகும்.
இன்று காலை நிலவரப்படி நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,22,526 ஆக இருக்கிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


