கரோனா தடுப்பூசி பணிகள் குறித்து அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக ஒரு கோடி கோவிஷீல்டு தடுப்பூசி கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நாளை காலை முதல் தடுப்பூசிகளை அனுப்பும் பணிகள் நடைபெறும் என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து மாநில அரசுகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். காணொலி வாயிலாக நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில முதல்வர்கள் அல்லது அமைச்சர்கள் இதில் பங்கேற்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


