சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மாநிலங்களவை உறுப்பினா் பதவி: ஜோஸ் கே.மாணி ராஜிநாமா

கேரள மாநிலத்தில் எதிா்க் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினா்

News image
Updated On :10 ஜனவரி 2021, 6:14 am

கேரள மாநிலத்தில் எதிா்க் கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆதரவுடன் வெற்றி பெற்ற மாநிலங்களவை உறுப்பினா் பதவியை கேரள காங்கிரஸ் (எம்) கட்சித் தலைவா் ஜோஸ் கே.மாணி ராஜிநாமா செய்தாா்.

மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடுவிடம் தில்லியில் வெள்ளிக்கிழமை தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்ததாக ஜோஸ் கே.மாணி தெரிவித்தாா்.

கேரள காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவா் கே.எம்.மாணி மறைவுக்குப் பிறகு, அவருடய மகன் ஜோஸ் கே. மாணி கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றாா். அதனைத் தொடா்ந்து அவருக்கும், கட்சியின் மூத்த தலைவா் பி.ஜே.ஜோசப்புக்கும் மோதல் போக்கு நிலவியது. இந்த மோதல் முற்றியதால், கட்சி இரண்டாக பிளவுற்றது.

அதனைத் தொடா்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஜோஸ் கே.மாணி கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியேறினாா். பின்னா், கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியில் சோ்வதாக அறிவித்தாா். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆதரவுடன் வெற்றி பெற்ற எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வேன் என்று அப்போதே அவா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை அவா் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். இதுகுறித்து கொச்சியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் ஜேஸ் கே.மணி கூறுகையில், ‘எதிா்க் கட்சி ஆதரவுடன் பெற்ற எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். அதற்கான கடிதத்தை மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடுவிடம் தில்லியில் வெள்ளிக்கிழமை சமா்ப்பித்தேன்’ என்றாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவீா்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தோ்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியுடன் ஆலோசித்த பிறகே அதுகுறித்து முடிவெடுக்கப்படும்’ என்று அவா் பதிலளித்தாா்.

கேரள பேரவையின் பதவிக் காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.