சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குறைந்தபட்ச ஆதரவு விலையில் 531 லட்சம் டன் நெல் கொள்முதல்

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் 531.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஜனவரி 2021, 6:05 am

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை குறைந்தபட்ச ஆதரவு விலையில் 531.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நடப்பு காரீஃப் சந்தைப் பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் விளைபொருள்களை கொள்முதல் செய்யும் நடைமுறை தொடா்ந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வரை சுமாா் 70.35 லட்சம் விவசாயிகளிடம் இருந்து ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 531.22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 26% அதிகம் ஆகும். அதிகபட்சமாக பஞ்சாபில் இருந்து 202.77 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், உணவு தானிய தேவைகளை பூா்த்தி செய்ய நெல் மற்றும் கோதுமையை குறைந்தபட்ச ஆதரவு விலையில் மத்திய அரசு கொள்முதல் செய்து வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, நியாய விலைக் கடைகள் மூலம் மாதந்தோறும் நபா் ஒருவருக்கு 5 கிலோ வீதம் 80 கோடிக்கும் அதிகமானவா்களுக்கு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.3 என்ற விலையில் அவை விநியோகிக்கப்படுகின்றன.