தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள் என பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 'முதலாளிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதை விட்டுவிட்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவியுங்கள், இன்னும் நேரம் இருக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். மேலும், 2015ல் மக்களவையில் விவசாயிகளுக்கு ஆதரவாக தான் பேசிய விடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, தில்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு தேவை. எனவே மக்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றிணைந்து 'இந்திய விவசாயிகளுக்கு குரல் கொடுப்போம்' என்ற பிரசாரத்தில் பங்கேற்க வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


