சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி: மத்திய அரசு

நாட்டில் 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

News image

7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி: மத்திய அரசு (கோப்புப்படம்)

Updated On :10 ஜனவரி 2021, 6:29 pm

நாட்டில் 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தைத் தொடர்ந்து தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளத்தில் 62 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பண்ணைகளிலும் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பறவைக் காய்ச்சலிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் நாட்டில் 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல், ஹரியாணா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் நீர்நிலைகள், உயிருள்ள பறவை விற்பனை சந்தை, உயிரியல் பூங்காக்கள், கோழிப் பண்ணைகள், இறந்த பறவைகளை அடக்கம் செய்யும் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.