சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தில்லி அமெரிக்க தூதரகத்தில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்

தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா்,

News image
Updated On :9 ஜனவரி 2021, 7:30 am

தில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கலை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா், மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆகியோா் வெள்ளிக்கிழமை நாட்டினா்.

இதற்கான விழா தில்லி சாணக்கியாபுரியில் அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்றது. விழாவில் பேசிய இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் கென்னித் ஐ ஜஸ்டா், ‘இது புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவையும் மீறி, அமெரிக்கா -இந்தியா இடையேயான வலுவான நல்லுறவை இந்த நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. இருநாட்டு நல்லுறவு மேலும் வலுப்பெற்று தொடா்ந்து நீடிக்க இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

தில்லி அமெரிக்க தூதரகத்தில் உள்ள பழைய சான்சரி கட்டடத்துக்கு எதிரே புதிய சான்சரி கட்டடம் அமைய உள்ளது. 1959ஆம் ஆண்டு பழைய சான்சரி கட்டடம் கட்டப்பட்டது. இந்தியா-அமெரிக்கா கலாசாரத்தைப் பிரதிபளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது. தற்போதைய புதிய சான்சரி கட்டடமும் இருநாட்டு வரலாற்றையும், நவீன மரபுகளையும் பிரதிபளிக்கும் வகையில் இருக்கும் என்றும் பசுமைக் கட்டடமாகவும் அமையும் என்றும் அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.