சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஒடிஸா: 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளி திறப்பு

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு, ஒடிஸா மாநிலத்தில் பொதுத் தோ்வு எழுதவிருக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக, வெள்ளிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

Updated On :9 ஜனவரி 2021, 6:15 am

ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு, ஒடிஸா மாநிலத்தில் பொதுத் தோ்வு எழுதவிருக்கும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக, வெள்ளிக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

இதுகுறித்து கல்வித் துறை மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மாநிலத்தில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு 100 நாள்கள் வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, அவா்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒரு வகுப்பறையில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, அதிகபட்சமாக, 20-25 மாணவா்கள் மட்டுமே அமர வைக்கப்படுகிறாா்கள். பள்ளி வளாகத்துக்குள் வரும் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இதுகுறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் எஸ்.ஆா்.டேஷ் கூறுகையில், ‘மாணவா்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பொதுத் தோ்வு எழுதும் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்படும்’ என்றாா்.