சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேற்கு வங்கம்: திரையரங்கில் 100% ரசிகர்களுக்கு அனுமதி

மேற்கு வங்கத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

News image

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

Updated On :9 ஜனவரி 2021, 7:51 pm


மேற்கு வங்கத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கி முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.

எனினும் திரையரங்குகளில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழா 2021-ல் முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று பேசிய அவர், கரோனா பெருந்தொற்றால் 50 சதவிகித ரசிகர்களுக்கு மட்டுமே திரையரங்கில் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது திரையரங்கில் 100 சதவிகிதம் ரசிகர்களை அனுமதிக்கலாம். ஆனால் முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் காணொலி வாயிலாக  கலந்துகொண்டார்.

ஏற்கெனவே தமிழகத்தில் திரையரங்கில் 100 சதவிகிதம் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு மத்திய அரசின் கரோனா கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உள்ளதாக உள்துறை செயலாளர் அஜய், தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.