சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

குஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கி காலமானார்

காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான  மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார்.  இவர் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

News image

குஜராத்தின் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கி காலமானார்

Updated On :9 ஜனவரி 2021, 10:38 pm


புது தில்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரும், குஜராத்தின் முன்னாள் முதல்வருமான  மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார்.  இவர் மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

94 வயதான மாதவ்சிங் சோலங்கி காந்திநகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை உயிரிழந்தார்.

மாதவ்சிங் சோலங்கி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், குஜராத் அரசியலில் பல ஆண்டு காலமாக மிக முக்கியப் பங்காற்றியவர் என்றும், இந்த சமுதாயத்துக்கு அவர் மேற்கொண்ட சேவைகள் மூலம் அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவ்சிங் சோலங்கி மறைவுக்கு சுட்டுரையில் இரங்கல் தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு வலுவூட்டியதற்காகவும், சமூக நீதியை நிலைநாட்டியதற்காகவும் அவர் எப்போதும் நினைவில் கொள்ளப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார்.