புது தில்லி: புது தில்லியில், 10 வயது சிறுவனை கடத்தி, அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி, மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் சிறுவனைக் கொன்ற இரண்டு சிறார்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புது தில்லியின் கஜுரி காஸ் பகுதியில் உள்ள ஒரு மசூதியின் இரண்டாவது தளத்தில் கட்டுமானப் பொருள்கள் போட்டு வைத்திருந்த இடத்திலிருந்து 10 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை சிறுவன் காணாமல் போன நிலையில், சிறுவனை உறவினர்களும், காவலர்களும் தேடியபோது, மசூதியின் இரண்டாவது தளத்தில் அவனது உடல் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மசூதிக்கு வியாழக்கிழமை சென்ற சிறுவன், திரும்பி வராததால், அங்கேதான் அவன் காணாமல் போயிருப்பான் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மசூதிக்குள் தேடுதல் பணி நடைபெற்ற போது, சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவனைக் கடத்தி வந்து, மசூதிக்குள் ஒளித்து வைத்துக் கொண்டு, பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்ட நினைத்த சிறார்கள், தேடுதல் வேட்டை தீவிரமானதால், சிறுவனை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளனர்.
அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சிறார்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


