மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் விவசாயிகள் ஒவ்வொருவருக்கும் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அம்மாநில பாஜக தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு (2021) தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராமில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் கைலாஷ் விஜயவர்ஜியா, “நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு அகற்றப்பட்ட உடன் விவசாயிகளுக்கு உரியத் தொகை வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


