புது தில்லி: ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகவுள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா வகை செல்லிடப்பேசிகள் ஜனவரி 14-ம் தேதி அறிமுகமாக உள்ளது. ஆனால், அதற்கு முன்பே தென்கொரிய சந்தைகளில் அதன் விலைகள் தெரிய வந்திருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
தென் கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈடி செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், கேலக்ஸி எஸ்21 விலை டாலர் 916 (இந்திய ரூபாயில் ரூ.67,000)ஆகவும், கேலக்ஸி எஸ்21 பிளஸ் டாலர் 1,025 (இந்திய ரூபாயில் சுமார் 75,000) ஆகவும் இருக்கிறது.
கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா செல்லிடப்பேசியின் விலை டாலர் 1,329 (இந்திய ரூபாயில் 97000) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வெளியான கேலக்ஸி எஸ்20, கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்20+ ஆகியவை மிக அதிக விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸியில் வெளிவரவுள்ள கேலக்ஸி எஸ் 21 மற்றும் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஆகிய வகை செல்போன்களை விட கூடுதல் கேமரா வசதியையும், வெளிப்புறத் தோற்றத்தையும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கொண்டுள்ளது.
கேலக்ஸி எஸ் 21 6.2 அங்குல திரையும், கேலக்ஸி எஸ் 21 பிளஸில் 6.7 அங்குல திரையும், கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில் 6.8 அங்குல திரையும் உள்ளது.
கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போனில் முன்புறத்தில் 10எம்பி கேமராவும், பின்புறத்தில் 10 மடங்கு ஜூமிங் வசதியுடன் 108எம்பி மெயின் கேமராவும், 12எம்பி அல்ட்ரா வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


