வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தையொட்டி நடைபெற்ற 8ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம் என்ற பதாகைகளுடன் விவசாயிகள் பங்கேற்றனர்.
மத்திய அரசு - விவசாயிகள் இடையே 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தொடங்கியது. வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 44-வது நாளாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசுடன் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 7-ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது விவசாயிகள் சார்பாக பங்கேற்ற பிரதிநிதிகள் ‘வேளாண் போராட்டங்களில் வெற்றி பெறுவோம் அல்லது உயிரை விடுவோம்’ ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் பங்கேற்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


