வெள்ளிக்கிழமை தொடங்கிய கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி வெளிநடப்பு செய்தது.
கேரள சட்டப்பேரவையின் 22ஆவது பேரவைக் கூட்டம் இன்று (ஜனவரி 8) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையாற்றினார்.
அப்போது ஆளும் இடது முன்னணி அரசைக் கண்டித்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது. கேரளத்தில் நடப்பாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இடதுமுன்னணி அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை தெரிவித்து வருகின்றன.
கேரளத் தங்கக் கடத்தல் வழக்கு உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, “இது ஊழல் மிகுந்த அரசு” எனக் குற்றம்சாட்டினார்.
ஜனவரி 15ஆம் தேதி மாநில நிதியமைச்சர் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் மீதான விவாதத்தைத் தொடர்ந்து ஜனவரி 28ஆம் தேதி சட்டப்பேரவை அமர்வு நிறைவு பெறுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


