ஜம்மு-காஷ்மீரில் மருத்துவமனையிலிருந்து மகப்பேறு முடிந்த தாயையும், பச்சிளம் குழந்தையையும் 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவத்தினர் சுமந்து வந்து அவர்களது வீட்டில் சேர்த்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் ராணுவத்தினர் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிப் பொழிவால் சாலைகளில் பனிப்படர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடர் பனியால் பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பசல்போரா மருத்துவமனையில் மகப்பேறு முடிந்த தாய்- சேய் வீடு திரும்ப சோபோரா பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள் உதவியுள்ளனர்.
பசல்போரா பகுதியிலிருந்து துனிவார் பகுதி வரை 3.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தாயையும், சேயையும் படுக்கையில் வைத்து ராணுவ வீரர்கள் சுமந்து வந்துள்ளனர். ராணுவ வீரர்களுடன் செவிலியரும் உதவிபுரிந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு கர்ப்பிணிப் பெண்ணை ராணுவ வீரர்கள் சுமந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


