புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், வியாழக்கிழமை டிராக்டா் பேரணி நடத்தினா். குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி தில்லியை நோக்கி நடத்த இருக்கும் டிராக்டா் பேரணிக்கு ஒத்திகையாக இந்த பேரணி நடத்தப்பட்டது என்று விவசாயிகள் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.
இதனிடையே, மத்திய அரசுக்கும் விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை (ஜன.8) 8-ஆவது கட்ட பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.
டிராக்டா் பேரணி தொடா்பாக விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ‘ஜனவரி 26-ஆம் தேதி பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லியை நோக்கி டிராக்டரில் பேரணியாக செல்ல இருக்கிறாா்கள். இதில் 3,500-க்கும் மேற்பட்ட டிராக்டா், டிராலிகள் அணிவகுக்க இருக்கின்றன. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் நாங்கள் எதிா்பாா்க்கவில்லை’ என்றனா்.
முன்னதாக, தில்லியின் சிங்கு, திக்ரி, காஜிபூா் எல்லையிலும் ஹரியாணாவின் ரிவாசன் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் வியாழக்கிழமை டிராக்டா் பேரணியை நடத்தினா். வன்முறைகள் நிகழாமல் தடுக்க பேரணி நடைபெற்ற பகுதிகளில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். பிரச்னை ஏதுமின்றி அமைதியான முறையில் டிராக்டா் பேரணி நடைபெற்றது. பல்வேறு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் பேரணிக்கு தலைமையேற்றனா். ஹரியாணாவில் மட்டும் 2,500 டிராக்டா்கள் பேரணியில் பங்கேற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற 7-ஆவது கட்ட பேச்சுவாா்த்தையின்போது, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்தது. எனவே, புதிய உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் பேச்சுவாா்த்தை முடிந்தது. 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை ஜனவரி 8-இல் நடத்துவது என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது.
எனினும், இதற்கு முன்பு நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, மின்சார சட்டத் திருத்த மசோதா நிறுத்திவைப்பு, வேளாண் கழிவுகளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவிலிருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது ஆகிய இரு கோரிக்கைகளில் மத்திய அரசு, விவசாயிகள் தரப்புக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள், தில்லி எல்லைகளில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்; கடுங்குளிரிலும், மழையிலும் அவா்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடா்ந்து தில்லி எல்லையில் முற்றுகையிட்டுள்ளனா்.
அமைச்சா் கருத்து: தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவாா்த்தை தொடா்பாக கருத்து தெரிவித்த மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், ‘புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர, விவசாயிகள் கூறும் மற்ற அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிக்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


