தமிழ் அகாதெமியைத் தொடர்ந்து கொங்கணி அகாதெமிக்கு தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டின் தலைநகரான தில்லியில் பல்வேறு மொழிகளை மேம்படுத்தும் நோக்கில் தில்லி கலாசாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் தமிழ் மொழி, கலாசாரத்தை வளா்க்கவும், பேணிப் பாதுகாக்கவும் தமிழ் அகாதெமி அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக கொங்கணி அகாதெமி அமைக்க தில்லி அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
"கொங்கணி பேசும் அனைத்து மக்களுக்கும், கொங்கணி மொழியை நேசிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கொங்கணி மொழியை மேம்படுத்துவதற்காக, தில்லியில் கொங்கணி அகாதெமி அமைக்க தில்லி அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது" என்று கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொங்கணி மொழி கோவாவின் அலுவல் மொழி மற்றும் இந்தியாவின் மேற்கு கடலோரப் பகுதியில் உள்ள கொங்கணி மக்களால் பேசப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


