சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை விட்டுக் கொடுத்த பெண்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

News image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

Updated On :7 ஜனவரி 2021, 10:54 pm

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் காதலித்த ஆணோடு சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அவரது மனைவிக்கு பெண் ஒருவர் விட்டுக் கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் ஒரு நபருக்கும் (வயது 44), 54 வயதுடைய அவரது சக பெண் ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது தீவிரமாகி அந்தப் பெண் அவரோடு சேர்ந்து வாழ விரும்பியுள்ளார். ஆனால் அந்த நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 16 வயதுடைய பெண் உட்பட இரு குழந்தைகள் உள்ளனர். அத்துடன் இவர்களது நட்பிற்கு அந்த ஆணின் மனைவி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு இடையேயான பிரச்சினை முற்றி விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அங்கு சமரச மையத்தில் நடந்த ஆலோசனையில் தனது கணவனை விட்டு விலகுவதற்கு அந்தப் பெண் ஒரு நிபந்தனை விதித்துள்ளார். அதனை ஏற்று குறிப்பிட்ட அந்த காதலி ரூ.ஒன்றரைக் கோடி மதிப்புடைய தனது சொத்துக்களை மனைவியின் பெயரில் மாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்தப் பெண் தனது கணவனை விட்டு இரு குழந்தைகளுடன் பிரிந்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் அங்கே பேசு பொருளாகியுள்ளது.