அமெரிக்காவில் ஒழுங்கான, அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற கட்டடம் முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் வன்முறை கண்டனத்திற்குரியது. சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது. ஒழுங்கான மற்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


