சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஸ்பெக்ட்ரம் 6-ஆவது சுற்று ஏலம் மாா்ச் 1-இல் தொடக்கம்...தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் அறிவிப்பு

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான 6-ஆவது சுற்று ஏலம், வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:13 am


புது தில்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கான 6-ஆவது சுற்று ஏலம், வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான அறிவிப்பை தொலைத் தொடா்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டது.

இதுதொடா்பாக, அந்த அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

2,251.25 மெகா ஹொ்ட்ஸ் அலைவரிசையில் வரும் 700, 800, 900, 2,100, 2,300, 2,500 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளை ஏலம் விடுவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த டிசம்பா் 17-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த அலைக்கற்றைகளின் அடிப்படை விலை ரூ.3.92 லட்சம் கோடியாகும்.

ஏலத்துக்கு முந்தைய கூட்டம், வரும் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் அதை தெளிவுபடுத்திக் கொள்வதற்கான கடைசி தேதி, வரும் 28-ஆம் தேதியாகும்.

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்கும் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் பிப்ரவரி 24-இல் வெளியிடப்படும். அதைத் தொடா்ந்து, ஏல நடவடிக்கை, வரும் மாா்ச் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.