புது தில்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் பிடிவாதத்தை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்குத் தீர்வுகான முன்வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
தில்லி வந்துள்ள அவர் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
விவசாயிகள் தார்மிக அடிப்படையில் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடலாம். ஆனால், தங்களை வருத்திக் கொண்டு போராடுவது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற போராட்டங்களை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். பிரச்னைக்கு தீர்வு என்பது இரு தரப்பும் மனது வைத்தால் மட்டுமேதான் முடிவுக்கு வரும். அரசு இணக்கமாக பேசித் தீர்க்க வேண்டும். இதைத் தான் மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
இந்தப் போராட்டத்தின் மூலம் எதிர்க்கட்சிகளும், இடைத்தரகர்களும் குளிர்காய நினைக்கிறார்கள். போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொள்ள நினைத்தாலும், எதிர்க்கட்சிகள் முடிவுக்கு கொண்டுவர விரும்பவில்லை. எனவே, விவசாயிகள் இதில் விழிப்போடு இருக்க வேண்டும்.
முதல்வர் வேட்பாளர்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதைப் போன்று எடப்பாடி பழனிசாமிதான் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது தேர்தல் நெருங்கும் போது தெரிவிக்கப்படும்' என்றார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


