சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறை வழக்குப் பதிவு

குடியிருப்பு கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

News image

நடிகர் சோனு சூட் (கோப்புப்படம்)

Updated On :7 ஜனவரி 2021, 9:39 pm

குடியிருப்பு கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பை ஜுவூ பகுதியில் ஆறு மாடிக் கட்டடத்தை உணவகமாக மாற்றியதாக நடிகர் சோனு சூட் மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் முறையான அனுமதியின்றி மாற்றங்கள் செய்ததாலும், உணவகமாக மாற்றியதாலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அறிக்கை அனுப்பப்பட்டது. எனினும் அதற்கு 30 நாள்களுக்குள் பதிலளிக்க சோனு சூட் தவறியதால், குடியிருப்பு பகுதியில்  நேரடியாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குடியிருப்பு பகுதியை முறைகேடாக உணவகமாக மாற்றியுள்ளதாக பிர்ஹான்மும்பை நகராட்சி சார்பில் ஜுவூ காவல்நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இதனைய்த் தொடர்ந்து நடிகர் சோனு சூட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.