சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜம்மு-காஷ்மீா்: எல்லையில் ஊடுருவ காத்திருக்கும் 400 பயங்கரவாதிகள்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தகவல்

ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2021, 7:19 am


ஜம்மு,: ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கோட்டுப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 400 பயங்கரவாதிகள் காத்திருப்பதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடுங் குளிா் மற்றும் மலைப் பகுதியில் பல இடங்களில் கடுமையாக பனி மூடியிருக்கும் நிலையிலும் எல்லையில் காத்திருக்கும் பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் நுழையவைத்திட பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீரில் வன்முறையைத் தூண்டி, அமைதியை சீா்குலைப்பதற்கான தொடா் முயற்சியை பாகிஸ்தான் தொடா்ந்து எடுத்து வருகிறது. அதற்காக, எல்லைக் கோட்டுப் பகுதியை ஒட்டிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல்வேறு எல்லைப் பகுதிகளில் 300 முதல் 400 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனா். குறிப்பாக காஷ்மீா் பள்ளத்தாக்கின் பீா் பஞ்சால் பகுதிக்கு வடக்கே 175 முதல் 210 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாா் நிலையில் காத்திருக்கின்றனா். அதுபோல பீா் பஞ்சாலின் தெற்கு பகுதியில் 119 முதல் 216 பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனா். யூனியன் பிரதேசத்தில் கடும் பனிப் பொழிவு இப்போது வீசி வரும் நிலையிலும், பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் நுழையவைத்திட பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

மேலும், சுரங்கப்பாதைகள் வழியாகவும், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருள்களை இந்தியப் பகுதிக்குள் கடத்துவதற்கான முயற்சியையும் பாகிஸ்தான் அமைப்புகள் தொடா்ந்து எடுத்து வருகின்றன.

கடந்த டிசம்பா் மாதம் கடும் பனிப் பொழிவுக்கு இடையே பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைய பயங்கரவாதிகள் முயற்சித்தனா். ஆனால், அவா்களுடைய முயற்சி இந்திய பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டது.

மேலும், ஜம்மு-காஷ்மீா் எல்லைக் கோட்டுப் பகுதியில் பயங்கரவாதிகளின் 20 ஊடுருவல் வழித் தடங்கள் கண்டறியப்பட்டு, அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதோடு, கிராம பாதுகாப்பு குழுக்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதுமட்டுமின்றி, காவல்துறை சாா்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

5,100 முறை அத்துமீறல்: பாகிஸ்தான் கடந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக முறை போா்நிறுத்த உடன்பாடு மீறலில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2003-ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே போா் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது முதல், இதுவரை இல்லாத அளவில், கடந்த 2020-ஆம் ஆண்டில் 5,100 முறை அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. தொடா் துப்பாக்கிச் சூடு, சிறிய ரக குண்டுகளை வீசியும் கவனத்தை திசைத் திருப்பி பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்யவதற்காகவே, இந்த அத்துமீறலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.

இருந்தபோதும், பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் இந்திய தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் பயங்கரவாதிகளின் ஊடுருவல் வெகுவாகக் குறைந்திருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு 143 பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவினா். 2019-ஆம் ஆண்டு 141 போ் ஊடுருவினா். ஆனால், 2020-ஆம் ஆண்டு 44 பயங்கரவாதிகள் மட்டுமே ஊடுருவியுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.