குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த 23 வயது மாற்றுத்திறனாளிப் பெண் வந்தனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது ரங்கோலியில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை வரைந்து பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார் வந்தனா. அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், வாழ்க்கையில் தொடர்ந்து சவால்கள் வந்துகொண்டேதானிருக்கும். ஆனால், எந்த சவாலையும் விட்டுவிடாமல், எதிர்கொண்டு அதை வீழ்த்துவதே உண்மையான வெற்றி என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து பதில் கடிதம் கிடைக்கப்பெற்றதால் வந்தனா மிகுந்த உற்சாகம் அடைந்திருப்பதாக அவரது சகோதரர் கிஷண்பாய் பட்டேல் தெரிவித்துள்ளார்.
தனது சகோதரிக்கு பிறந்தது முதலே காது கேட்பதும், வாய்ப்பேசவும் முடியாமல் போனதாகவும், தற்போது அவர் ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஓவியம் கற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


