கரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து யூனியன் பிரதேசத்தின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
தில்லியில் கரோனா மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சுகாதாரத்துறையின் தொடர் நடவடிக்கையால் தற்போது கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு தளர்வுகளின் படி பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடித்து மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக முதலாமாண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர்களுக்கு ஒன்றரை முதல் இரண்டு மாதங்களுக்குள் பாடம் உள்பட செய்முறைத் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இறுதியாண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இறுதியாண்டு மாணவர்கள் தேர்வு எழுதவும், அதற்காக பயிற்சி எடுக்கவும் வசதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு இறுதியாக இரண்டாமாண்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


