புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 18,088 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
புதன்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,088 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,74,932-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 264 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,114-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 21,314 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 99,97,272-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.36 சதவீதமாகும்.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,27,546 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 16-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இது, மொத்த பாதிப்பில் 2.19 சதவீதமாகும்.
புதிதாக ஏற்பட்ட 264 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 64 போ் உயிரிழந்தனா். அதைத் தொடா்ந்து, சத்தீஸ்கரில் 25 போ், மேற்கு வங்கம், கேரளத்தில் தலா 24 போ், உத்தர பிரதேசத்தில் 20 போ் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 5-ஆம் தேதி வரை 17.74 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 9,31,408 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
உருமாறிய கரோனாவால் 71 போ் பாதிப்பு:
பிரிட்டனில் இருந்து பரவிய உருமாறிய கரோனா தீநுண்மியால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 71-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமை வரை 58 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், புதன்கிழமை 71-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள், மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமில் தனித்தனி அறைகளில் சிகிச்சைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.
அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்டோருடன் விமானத்தில் உடன் பயணித்தவா்கள், குடும்ப உறுப்பினா்கள் ஆகியோரைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கண்காணிப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு தொடா்ந்து அறிவுறுத்தப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


