புது தில்லி: திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்கள் அனுமதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது விதிமீறல் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு ஒரு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஏற்ப புதிய வழிகாட்டு அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிக்கையைப் பின்பற்றி நடக்க வேண்டும்.
உள்துறை அமைச்சகத்தின் கரோனா தடுப்பு விதிகள் நீர்த்துப் போகக்கூடிய நடவடிக்கைளை எடுக்கக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையைப் பின்பற்றி நடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு திரும்பப் பெறப்படும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


