ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஜம்மு பகுதியில் 32.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் தோடா, படேர்வா, பானிஹால் மற்றும் ரம்பன் பகுதிகள் அதிகபட்சமாக 4 செ.மீ. பனிப்பொழிவை சந்தித்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக மூடப்பட்ட நிலையில் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றுள்ளன.
ஜவஹர் சுரங்கப்பாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீர் முழுவதும் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர்ந்தாலும் கத்ரா மற்றும் ஜம்மு இடையேயான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
அதேசமயம் தொடர் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக ஒன்பது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


