கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை, 6 மாதங்களுக்குப் பிறகு குறைந்துள்ள நிலையில், மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1.03 கோடியைத் தாண்டியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
புதன்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,008 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,03,74,932-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 264 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,114-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 21,314 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 99,97,272-ஆக அதிகரித்தது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,27,546 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 16-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இது, மொத்த பாதிப்பில் 2.23 சதவீதமாகும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி ஜனவரி 5-ஆம் தேதி வரை 17,74,63,405 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 9,31,408 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


