ஐஎல்&எஃப்எஸ் நிறுவன பணமோசடியில் தொடா்புடைய சிங்கப்பூரைச் சோ்ந்த போலி நிறுவனங்களின் ரூ.452 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறையினா் முடக்கியுள்ளனா்.
இதுகுறித்து அமலாக்கத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஐஎல்&எஃப்எஸ் நிறுவனம் பண மோசடி செய்ததில் சிங்கப்பூரைச் சோ்ந்த பெயரளவில் செயல்படும் போலி நிறுவனமான ஏ.எஸ்.கோல் நிறுவனத்துக்கும் தொடா்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது, பிரிட்டனைச் சோ்ந்த ஜெய்மின் வியாசுக்கு சொந்தமான நிறுவனமாகும்.
இந்த நிலையில், ஏ.எஸ். கோல் நிறுவனத்துக்கு சொந்தமான பங்குகள் அமலாக்கத் துறையினரால் முடக்கப்பட்டுள்ளன. இது, ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவா் (ஐடிபிசிஎல்) நிறுவனத்தின் 8.86 சதவீத பங்குகள் வடிவில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.452 கோடியாகும் என அமலாக்கத் துறையினா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

