நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் நிலையில் தில்லியில் மத்திய அரசு கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது.
பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. கேரளத்தில் கோட்டயத்தில் ஒரே இடத்தில் இருந்த 1,600 வாத்துகள் இறந்துள்ளன. இதையடுத்து கேரள அரசு இதனை மாநில பேரிடராக அறிவித்துள்ளது. ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்திலும் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு தில்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றை அமைத்துள்ளது. இது நாடு முழுவதுமுள்ள மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவுவதை கண்காணிப்பதையோடு, தடுக்கும் வழிமுறைகளை வழங்கும்.
பறவைகளின் இறப்பு விவரங்கள் குறித்த அறிக்கையை மாநில அரசுகள் வாரத்திற்கு ஒருமுறை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


